லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்
துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பெருமாள்மலை செல்லும் வழியில் உள்ள திருமண மண்டபத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக மணவறை அலங்காரம் செய்வதற்காக திருச்சியை சேர்ந்த காந்தி என்பவரது மகன் சரத்(வயது 24) வந்திருந்தார். அவர் சரக்கு வாகனத்தில் இருந்து இரும்பு குழாயை எடுத்து மண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது மண்டபத்தின் வெளியே உள்ள உயர்வழுத்த மின் கம்பி மீது இரும்பு குழாய் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று சரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவர், பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைப்பதற்காக சரத்தின் குடும்பத்தாரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை பெற்றுக்கொண்ட அவர் மேலும் பணம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சரத்தின் குடும்பத்தினர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் துறையூர் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story