நாகையில், நடிகர் சூர்யா நடித்த படம் திரையிடப்படும் தியேட்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா நடித்த படம் திரையிடப்படும் நாகை தியேட்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:-
நடிகர் சூர்யா நடித்த படம் திரையிடப்படும் நாகை தியேட்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சூர்யா படத்துக்கு எதிர்ப்பு
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்துக்கு பா.ம.க.வை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சூர்யா நடித்து தற்போது வெளிவந்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை திரையிடக்கூடாது என்று சில மாவட்டங்களில் தியேட்டர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து நாகை டாட்டா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இதையொட்டி அந்த தியேட்டர் முன்பு நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்
இந்த நிலையில் படம் முடிந்து வெளியே வந்த சூர்யா ரசிகர்கள் உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரை நிறுத்தக்கோரி பதாகை ஏந்தி நின்றனர்.
அதேபோல வேதாரண்யத்தில் உள்ள ஒரு தியேட்டர் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story