இயற்கை விவசாயம், புதிய வேளாண் எந்திரங்களை கண்டுபிடித்த விவசாயிகளுக்கு பரிசு

இயற்கை விவசாயம், புதிய வேளாண் எந்திரங்களை கண்டுபிடித்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
இயற்கை விவசாயம், புதிய வேளாண் எந்திரங்களை கண்டுபிடித்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை வேளாண்மை
வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், புதிய எந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.
அதன்படி உள்ளூர் புதிய விவசாய தொழில் நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசும், இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி முதலில் செல்போனில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டிக்கு குத்தகைக்கு சாகுபதி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசிநாள்
தகுதியான விவசாயிகளை மாவட்ட தேர்வு குழு தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். இதையடுத்து பரிசீலனை செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் மற்றும் 3-ம் பரிசாக முறையே ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். அதேபோன்று வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசிநாளாகும்.
தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அதிகாரிகளை தொடர்ந்து கொள்ளலாம்.
இந்த தகவலை வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story