விராலிமலை பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தம்


விராலிமலை பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தம்
x
தினத்தந்தி 11 March 2022 12:07 AM IST (Updated: 11 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் இன்று நிறுத்தப்படுகிறது.

விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் காவிரி குடிநீர் வினியோகிக்கும் நீரேற்று நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து காவிரி குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளான பூதகுடி, விராலிமலை, கல்குடி, கசவனூர், கொடும்பாளூர், கோமங்களம், மேப்பூதகுடி, நம்பம்பட்டி, பொய்யாமணி, ராஜாளிப்பட்டி, தேங்காய்திண்ணிபட்டி, வடுகபட்டி, வானத்திராயன்பட்டி, விராலூர், விருதாப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என்று காவிரி குடிநீர் நீரேற்று நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story