நடிகர் சூர்யா திரைப்படம் வெளியான சினிமா தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா திரைப்படம் வெளியான சினிமா தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கரூர்,
நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இருந்தது எனவும், அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்கும் வரை சூர்யா நடிக்கும் திரைப்படத்தினை கரூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க கூடாது என பா.ம.க. மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையிலான நிர்வாகிகள் சினிமா தியேட்டர் மேலாளரிடம் நேற்றுமுன்தினம் மனு அளித்து இருந்தனர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நேற்று வெளியானது. கரூரில் 3 தியேட்டர்களில் அந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. இதனால் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூரில் நடிகர் சூர்யா திரைப்படம் வெளியான 3 தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story