குப்பைகளை அரைக்க எந்திர கூடம் அமைக்க எதிர்ப்பு

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் குப்பைகளை அரைக்க எந்திர கூடம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூரமங்கலம்:-
சேலம் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட அரியாகவுண்டம்பட்டி பகுதியில் குப்பைகளை அரைத்து உரம் தயாரிப்பதற்கான எந்திர கூடம் சுமார் ரூ.80 லட்சம் செலவில் கட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை தொடங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் குப்பை அரைக்கும் எந்திர கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி என்ஜினீயர் முருகன், எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் பணியை தொடங்காமல் திரும்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story