192 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

192 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர்
காதுகேட்காத, வாய்ப்பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்குகிறது.
இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நேற்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இன்றும் வேலூர் கலெக்டர் அலுவலகம் உள்பட மாவட்டத்தில் 4 இடங்களில் நேர்காணல் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நேர்காணலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்த நேர்காணலில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களுடைய விண்ணப்ப மனு பரிசீலிக்கப்பட்டது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் போன் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
இதில், வேலைசெய்யும் மற்றும் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் செல்போன் வழங்கப்படும்.
மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த நேர்காணலில் 192 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் செல்போன் வழங்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story