எருமப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்


எருமப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
x
தினத்தந்தி 11 March 2022 9:45 PM IST (Updated: 11 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனின் பிறந்த நாள் பொட்டிரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மாணவர்களுக்கும், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று இரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் பஸ் நிறுத்தம் அருகே திடீரென மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் அவர்கள் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள், பொதுமக்கள் மாணவர்களை தடுத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story