ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு தினமும் 150 டன் தேங்காய் வரத்து

ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு தினமும் 150 டன் தேங்காய் வரத்து உள்ளது.
சேலம்:-
ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு தென்னை மரங்கள் உள்ளன. அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் தேங்காய்கள் வரத்து உள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் தாராபுரம், அறச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலத்திற்கு அதிக அளவில் தேங்காய்கள் வருகின்றன. அதாவது ஒரு நாளைக்கு 150 டன் முதல் 200 டன் வரை தேங்காய்கள் வருகின்றன. கடந்த வருடம் இந்த கால கட்டத்தில் வரத்து குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு ஒரு டன் தேங்காய் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டன. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனை ஆகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு டன் தேங்காய் ரூ.6 ஆயிரம் விலை குறைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story