உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வாழ்த்து
நெமிலி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜீ.கே.உலக பள்ளி இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணையினை உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றியக்குழு தலைவருமான வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான பவானி வடிவேலு ஆகியோர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Related Tags :
Next Story