தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 2:09 AM IST (Updated: 13 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வீணாகும் குடிநீர்
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் நல்லிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பல நாட்களாக குழாய்களில் இருந்து குடிநீர் வீணாகிறது. எனவே, நல்லியை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -நாகராஜன்,
 ஆரல்வாய்மொழி.
ஓடையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் அலெக்சான்ட்ரா பிரஸ் ரோடு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி வடிந்தோட முடியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அங்குள்ள கடைகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையை சீரமைத்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலுக்கு முகம்மது, அலெக்சான்ட்ரா பிரஸ்ரோடு.
கால்வாயில் ஆக்கிரமிப்பு
திற்பரப்பில் வலது கரை கால்வாய் பண்டாரவிளை வழியாக செல்கிறது. இப்பகுதியில் கால்வாய் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     -வா.அனில்குமார், முழுக்கோடு.
விபத்து அபாயம்
நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குமரன்புதூர் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பின் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் சேதமடைந்து அருகில் உள்ள ஓடையில் கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுத்து அந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
                                     -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
குளம் தூர்வாரப்படுமா?
கிராத்தூர் அம்பலக்குளம் பகுதியில் சாலையோரம் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 2 வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தில் தண்ணீர் நிரம்பும் போது ஒரு குழாய் வழியாக தண்ணீர் ஏ.வி.எம். கால்வாய்க்கு செல்லும். ஆனால், இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குளத்தில் உள்ள தண்ணீர் பாசி படிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி குழாய் அடைப்பை சீரமைப்பார்களா?.                                   
-கி.சந்தோஷ்குமார், அம்பலக்குளம்.
எரியாத விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதன் தெருவில் இந்துநாடார் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மின் விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் பெண்கள், குழந்தைகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த விளக்கை மாற்றி புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                                    -ராஜமன்னர், ஜெகநாதன் தெரு.

Next Story