செஞ்சி அருகே சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா


செஞ்சி அருகே சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 13 March 2022 8:39 PM IST (Updated: 13 March 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சியை அடுத்த பொன்பத்தி சக்திவேல் முருகன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

செஞ்சி

சக்திவேல் முருகன்

செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி ஊராட்சியில் உள்ள சக்திவேல் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாவாஜனம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கணபதி பூஜையுடன் புண்யாவாஜனம், கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகுத ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு மேல் அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாவாஜனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

பின்னர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு 2-வது கால பூஜையும், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பரிசாஹுதி, மகாபூர்ணாஹுதி, யாத்ரா தானம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மங்கல வாத்தியம் இசைக்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சக்தி வேல்முருகன் கோவில் விமான கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மூலவருக்கும் அதைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பொன்பத்தி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்துடன் சுவாமி வீதிஉலா, வான வேடிக்கை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story