காவேரிப்பட்டணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பேரூராட்சி தலைவர் ஆய்வு

காவேரிப்பட்டணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 5, 13-வது வார்டுகளில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தது. அந்த பகுதியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் துணைத்தலைவர் மாலினி பாபா மாதையன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்களிடம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு கூறினார்.
தொடர்ந்து காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வந்த புகாரையடுத்து அவற்றை உடனடியாக உரிமையாளர்கள் வேறு இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story