ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியில் ெரயிலில் அடிபட்டு வாலிபர் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து சேகர் தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையொட்டி தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த வாலிபர் வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும், அரக்கு கலரில் பனியன் மற்றும் பேண்ட் கருப்பு கலரில் பெல்ட் அணிந்திருந்தார். வேறு எந்த அடையாளமும் இல்லை. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
ரெயில்வே போலீசார் வாலிபர் பிணத்தை பரிசோதனைக் காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? ரெயிலில் அடிபட்டு இறந்ததாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story