கிராமங்களுக்கு காலனி என்று இருப்பதை மாற்றிவிட்டுக் தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பெயரை வைக்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு


கிராமங்களுக்கு காலனி என்று இருப்பதை மாற்றிவிட்டுக் தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பெயரை வைக்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 14 March 2022 9:58 PM IST (Updated: 14 March 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கிராமங்களுக்கு காலனி என்று இருப்பதை மாற்றிவிட்டு தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கிராமங்களுக்கு காலனி என்று இருப்பதை மாற்றிவிட்டு தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் திங்கள்கிழமை தோறும் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

அதன்படி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.  

சாலை வசதி

ஊட்டி அருகே தாவணெ, மல்லிகொரை கிராம மக்கள் சாலை வசதி கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- தாவணெ முதல் மல்லிகொரை வரை நடைபாதை உள்ளது. சோலூர் கிராமம் முதல் கூக்கல் வரை 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

கிராமங்களில் வசிப்பவர்களின் நலன் கருதி இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டது. தாவணெ முதல் மல்லிகொரை வரை 3 கி.மீ. தூரம் இணைப்பு சாலை இல்லாததால் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியும் இதுவரை நடைபெறவில்லை. எனவே, நடைபாதையை அகலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

பெயரை மாற்ற வேண்டும்

கூடலூர் அருகே நெலாக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நெலாக்கோட்டை-கூடலூர் நெடுஞ்சாலை நெலாக்கோட்டையில் கடந்த ஆண்டு கனமழையால் தடுப்புச் சுவர் இடிந்தது. 

பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு, தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் உறுதி அளித்தனர். பருவமழைக்கு முன்னர் தடுப்பு சுவர் கட்ட ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், நீலகிரி மாவட்டத்தில் காலனி என்று பல ஊர்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இப்படி அழைப்பது சரியானதல்ல. 

தமிழுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த வீர முன்னோர் களின் பெயரை நினைவுகூறும் வகையில் அவர்களின் பெயர்களுடன் சேர்த்து காலனிகளுக்கு ஊர்களின் பெயரை (அதாவது நகர் அல்லது ஊர்) வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story