மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவர் போக்சோவில் கைது


மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 15 March 2022 1:01 AM IST (Updated: 15 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி திருமணம் செய்த மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கோகுல்ராஜ்(வயது 22). இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த மாணவியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கோகுல்ராஜ், அந்த மாணவியை சண்டிகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சண்டிகாரில் இருந்த கோகுல்ராஜை போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து அவர்கள் கடந்த 8-ந் தேதி சொந்த ஊரான சிலம்பூருக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து கோகுல்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story