எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏமாற்றம்

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
ஓசூர்:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகள் உள்பட 58 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஓசூர் மூக்கண்டப்பள்ளி பொதிகை நகர் 3-வது கிராசில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகரன் என்பவரின் தங்கையான ராஜேஸ்வரிக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் சோதனை நடத்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 8 போலீசார் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்த முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த தீபா என்பவர், தாங்கள் வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும், ராஜேஸ்வரி சென்னையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தீபாவிடம் கையெழுத்து பெற்று கொண்டு, லஞ்ச ஒழிப்பு போலீசார் எதுவும் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Related Tags :
Next Story