கடும் வறட்சி காரணமாக மசினகுடி பகுதியில் விவசாய பயிர்கள் கருகும் அவலம்

கடும் வறட்சி காரணமாக மசினகுடி பகுதியில் விவசாய பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
கூடலூர்
கடும் வறட்சி காரணமாக மசினகுடி பகுதியில் விவசாய பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
கடும் வறட்சி
மசினகுடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் விவசாய பயிர்கள் கருகும் அவல நிலையில் உள்ளது.
இதேபோல் வனப்பகுதியிலும் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வனவிலங்கு கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.
இதன் காரணமாக காமராஜ் சாகர் மற்றும் பைக்காரா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வனத்துறை சார்பில் குந்தா மின் கோட்ட பொறியாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இதேபோல் விவசாய பயிர்களை தொடர்ந்து பராமரிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பயிர்கள் கருகும் அவலம்
கோடை காலத்தை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய், மேரக்காய் அவரைக்காய் மற்றும் கத்தரிக்காய் உள்பட பல வகை காய்கறிகள் பயிரிடப் பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோடை மழைபெய்வது வழக்கம்.
ஆனால் நடப்பாண்டில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாவனல்லா, செம்மநத்தம் பகுதியில் விவசாய பயிர்கள் கருகி வருகிறது.
இதன் காரணமாக நஷ்டம் ஏற்படும் சூழல் காணப்படுகிறது. இந்த பகுதியில் அணை தண்ணீரை எதிர்பார்த்து விவசாய பணி நடைபெற்று வருகிறது.
தண்ணீர் திறக்க வேண்டும்
இந்த நிலை நீடித்தால் அனைத்து பயிர்களும் கருகிவிடும். அதுபோன்று கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கொடுக்க முடியாமல் போய்விடும். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காமராஜர் மற்றும் பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story