தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவர் கொலை


தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவர் கொலை
x
தினத்தந்தி 15 March 2022 10:00 PM IST (Updated: 15 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

தலையில் கல்லை போட்டு ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

பெங்களூரு:
பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தூப்பனஹள்ளியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத்(வயது 32). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத் ஜே.பி.நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுநாத்துக்கும், அங்கு மதுகுடிக்க வந்திருந்த சிலருக்கும் இடையே தகராறு உண்டானது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மஞ்சுநாத் ஆட்டோவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்த மர்மநபர்கள் மஞ்சுநாத்தை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதுபற்றி ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story