மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி

மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி
திருச்சி, மார்ச்.16-
திருச்சி மன்னார்புரத்திலிருந்து ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்துக்கும், ஜங்ஷன் மேம்பாலத்திலிருந்து மன்னார்புரத்துக்கும் செல்லும் வாகனங்கள் ஒரே சாலையில் எதிர் எதிர்திசையில் சென்று வந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் ஜங்ஷன் மேம்பாலத்தில் இருந்து மன்னார்புரம் நோக்கி சென்ற லாரியும், எதிர்திசையில் வந்த லாரியும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதையடுத்து அந்த பகுதியில் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மன்னார்புரத்திலிருந்து ஜங்ஷன் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் நெ.1 பட்டாலியன் சாலை வழியாக சென்று ஜங்ஷன் மேம்பாலத்தை அடைந்து மாற்றுப்பாதை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நேற்று காலை மன்னார்புரம் அருகே நின்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Related Tags :
Next Story