திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நிறைவு


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 16 March 2022 1:06 AM IST (Updated: 16 March 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நிறைவு பெற்றது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் கோவிலில் மாசித்திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி பெண் பக்தர்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும திருக்கோகர்ணம் பிரகாதம்பாள் கோவிலில் உள்ள குளத்தில் முளைப்பாரியை கரைத்தனர். திருவிழா நிறைவடைந்ததையொட்டி கொடியிறக்கப்பட்டு, காப்பு களையப்பட்டது.


Next Story