தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம்


தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 1:54 AM IST (Updated: 16 March 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. தொழிற்சங்க மண்டலத்தலைவர் ராஜசெல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருகிற 28,29-ந்  தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள வேலை நிறுத்தம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. வாயிற் கூட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர்.வி. மாடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் பாண்டியன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க சம்மேளன உபதலைவர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story