மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை


மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 16 March 2022 2:11 AM IST (Updated: 16 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 14 பேருக்கு மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 14 பேருக்கு மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் முதல் அலையின் தாக்கம் கடும் விளைவை ஏற்படுத்தியது.தொடக்கத்தில் கொரோனாவுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்தது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று பரவுதல் படிப்படியாக குறைந்தது. உயிரிழப்புகளும் குறைந்தன. இதனிடையே கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் 2-வது அலைக்கு மாவட்டத்தில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பின்னர் பாதிப்பு வேகமாக குறைந்தது. கடந்த 3-ந் தேதி முதல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் சென்றது.
யாருக்கும் பாதிப்பு இல்லை
மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு ஒருவர் தான் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. அதாவது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பில்லை.
இதனிடையே ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு 1,762 பேர் பலியாகி உள்ளனர்.
தடுப்பூசி 
மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 91.92 சதவீத பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 74.54 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story