காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி


காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 March 2022 12:04 AM IST (Updated: 17 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி

துவரங்குறிச்சி, மார்ச்.17-
வளநாடு அருகே கோவில்பட்டி தொட்டியபட்டியில் பிரசித்தி பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் உறுமி சப்தம் முழங்க புல்லுரணி கரைக்கு சென்று பின்னர் அங்கு கரகம் பாலித்து அங்கிருந்து அம்பாள் கோவிலை நோக்கி சென்றார். கரகம் பாலிக்கப்பட்டு அம்பாள் தூக்கிச் சென்ற போது  வாணவேடிக்கைகள் நடந்தது.  பின்னர் நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், சேவல் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்று மாலை காளைகள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாட்டிற்கு பின் கோவில் அருகே உள்ள திடலில் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேவராட்டம் நடைபெற்றது. நேற்று இரவு ஆலயத்தில் இருந்து கரகம் புறப்பட்டு புல்லூரணி தெப்பத்தில் விடப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story