11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்


11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
x
தினத்தந்தி 18 March 2022 2:00 AM IST (Updated: 18 March 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2021-22 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு 4-ம் கட்டமாக கள்ளூர், கீழக்கொளத்தூர், வடுகபாளையம், திருமானூர், திருவெங்கனூர், குந்தபுரம், வெங்கனூர், நானாங்கூர், ஒரியூர், அழகியமணவாளன், காமரசவல்லி மாத்தூர் ஆகிய 11 கிராமங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவில் எசனை, சுள்ளங்குடி ஆகிய 2 கிராமங்களில் வருகிற 25-ந்தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story