வேலூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 7:55 PM IST (Updated: 18 March 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே வேலூர் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஷம்சுல்பாகவி தலைமை தாங்கினார். திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணை தலைவர் பஷீர்அகமத் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story