பட்டமங்கத்தில் பங்குனி தேரோட்டம்


பட்டமங்கத்தில் பங்குனி தேரோட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 9:40 PM IST (Updated: 18 March 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் பங்குனித் திருவிழாவை யொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர், 
 திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில்  பங்குனித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
பூச்சொரிதல் விழா
திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அழகு சவுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி  பூச்சொரிதல் விழா நடைபெற்றது.  
விநாயகர், அழகுசவுந்தரி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை தினமும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7-ம் திருநாளில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். 8-ம் திருநாளில் சாமி  புறப்பாடு நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று அழகு சவுந்தரி அம்மன் பெரிய தேரிலும்,  விநாயகர் சிறிய தேரிலும் எழுந்தருளினர். 
பின்னர் அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 5.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இரவு காமதேனு வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
பூ பல்லக்கு 
10-ம் திருநாளான இன்று  காலை 10 மணி அளவில் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெறும். 11-ம் திருநாளான நாளை 20-ந் தேதி சாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 11 மணிக்குமேல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும்.

Next Story