தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 March 2022 10:44 PM IST (Updated: 18 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சி பள்ளிவாசல் தெரு, நடுத்தெரு, மேலத்தெருக்களை இணைக்கும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிமுன் அன்சாரி, நாகை.
குண்டும், குழியுமான சாலை 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சலிப்பேரியை அடுத்த கீழ்க்குடி கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இதேபோல் நன்னிலம் தாலுகா கொத்தவாசல் கிராமம் மேலத்தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும், குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், திருவாரூர்.

Next Story