தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் தெப்பத்திருவிழா


தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 18 March 2022 11:39 PM IST (Updated: 18 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சாமி கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் பழமைவாய்ந்த பேட்டராய சாமி கோவிலில் அடுத்த மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று பேட்டராய சாமி கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. பெரிய ஏரியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி அமர வைக்கப்பட்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது. அப்போது தெப்பம் ஏரியில் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story