சேதமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 March 2022 11:58 PM IST (Updated: 18 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

லெட்சுமாங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பயணிகள் நிழற்குடை 
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் வடபாதிமங்கலம் வழித்தடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையை கூத்தாநல்லூர், பாண்டுகுடி, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம், சேந்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டு மழை காலங்களில் மழை தண்ணீர் கட்டிடத்தின் உள்ளே சென்று விடுகிறது. 
சீரமைத்து தர வேண்டும் 
இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வெயில் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் சிரமப்படுகின்றனர். 
எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக நவீன வசதிகளுடன் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story