சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி


சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி
x
தினத்தந்தி 19 March 2022 2:17 AM IST (Updated: 19 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் 3 சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் மகாமக குளத்தில் புனிதநீராடினர்.

கும்பகோணம்;
கும்பகோணத்தில் 3 சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள்  மகாமக குளத்தில் புனிதநீராடினர்.
பங்குனி உத்திரம்
கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு கடந்த 9-ந் தேதி அந்தந்த கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் உற்சவமாக நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு விழா நாட்களில் காலை மாலை நேரங்களில் சாமி- அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 
மகாமக குளம்
பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு தொடங்கியது. விழாவையொட்டி விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் உடன் நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகையம்மன் மற்றும் கம்பட்டவிஸ்வநாதர் தனித்தனி வாகனங்களில் வீதிஉலாவாக மகாமக குளக்கரையை அடைந்தனர். 
தீர்த்தவாரி
மதியம் 12 மணியளவில் மகாமகம் குளக்கரையில் தீர்த்தவாரி மூர்த்தியான அஸ்திர தேவருக்கு பால், திரவியம், மஞ்சள் பொடி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மகாமக குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.  கொட்டையூர் கோடீஸ்வரர்  கோவிலின் சார்பில் காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி  நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

Next Story