வடுவூர் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா

வடுவூர் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திரவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வடுவூர்:
வடுவூர் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திரவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கைலாசநாதர் கோவில்
வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவில் வடுவூர், சாத்தனூர், புள்ளவராயன் குடிகாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால் காவடி, செடில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமான் மயில்வாகனத்தில் வீதி உலா வந்தார். இதேபோல மன்னார்குடி அருகே உள்ள பாமணி நாகநாதசாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பரவாக்கோட்டை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் செட்டித்தெருவில் வேம்படி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பங்குனி விழாவையொட்டி நேற்று மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கரகம் புறப்பாடு நடந்தது. மாலை 6 மணி அளவில் வலங்கைமான் கடைத்தெருவில் வேம்படி மகாமாரியம்மன் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் செம்மறியாடு செடில் மரத்தில் ஏற்றி சுற்றுதல் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
---
Related Tags :
Next Story