மிளகாய் செடியில் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிப்பு

இளையான்குடி தாலுகாவில் மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் மஞ்சள் நோய் தாக்கத்தால் பாதிப்படைந்து உள்ளனர்.
இளையான்குடி,
இளையான்குடி தாலுகாவில் மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் மஞ்சள் நோய் தாக்கத்தால் பாதிப்படைந்து உள்ளனர்.
மஞ்சள் நோய்
சோதுகுடி, நெஞ்சத்தூர், அரணையூர், வல்லக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களில் மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் மஞ்சள் நோய் தாக்கத்தால் மிளகாய் செடிகள் காய்கள் காய்க்காமல் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விட்டது.
ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து எந்தவித பலனும் அளிக்காமல் நோய் தாக்கத்தால் மிளகாய் செடிகள் அழிந்து விட்டன.
இதேபோல தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மகசூல் கிடைக்க வேண்டிய நேரத்தில் மிளகாய் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு செடிகள் முற்றிலும் அழிந்து போனதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
நிவாரணம்
தோட்டக்கலை துறை அதிகாரிகள் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் நோய் தாக்கத்திற்கான காரணங்களையும், வருங்காலங்களில் மிளகாய் விவசாயம் பாதிப்படையாமல் பாதுகாக்க ஆய்வுகள் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறையின் அதிகாரிகளின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி மாவட்ட நிர்வாகம் தமிழக வேளாண் துறைக்கு அறிக்கையை அளித்து மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை
மேலும் இது போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படாத வண்ணம் வேளாண் துறையினர் ஆய்வுகள் செய்து இனிவரும் காலங்களில் நல்ல மகசூல் கிடைக்க விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story