சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 March 2022 2:32 AM IST (Updated: 20 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சாத்தூர், 
முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் சாத்தூர் தாலுகா முத்தார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் கலுசிவலிங்கம் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.  உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். இம்முகாமில் பல பிரிவைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய், இருதய நோய், கண்புரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன் மற்றும் செல்வின் செய்திருந்தனா். 

Next Story