தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

கல்வராயன்மலையில் தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த கண்ணு மகன் தங்கதுரை (வயது 35) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து கள்ளக்குறிச்சி சிறையில் அடைத்தனர். சாராய வியாபாரியான தங்கதுரை மீது கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 5-க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளதால், இவரின் இத்தகைய செயலை தடுக்கும் வகையில் தங்கதுரையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்தார்.
தடுப்பு காவல் சட்டம்
இதையடுத்து தங்கதுரையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அலுவலர்கள் மூலம் கள்ளக்குறிச்சி சிறையில் இருக்கும் தங்கதுரையிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story