முஸ்லிம் கூட்டமைப்பினர் சாலை மறியல்

கர்நாடக ஐகோர்ட்டு தீர்பை கண்டித்து முஸ்லிம் கூட்டமைப்பினர் சார்பில் பேகம்பூரில் சாலை மறியல் நடந்தது
திண்டுக்கல்:
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிந்து வர அம்மாநில ஐகோர்ட்டு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கண்டித்து முஸ்லிம் கூட்டமைப்பினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் முஸ்லிம் கூட்டமைப்பினர் சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த முஸ்லிம்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், முஸ்லிம் கூட்டமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்பினர் பேகம்பூரில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் சேக்பரித் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முஸ்லிம்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story