கோட்டப்பட்டி அருகே விபத்தில் நகை பட்டறை தொழிலாளி பலி

கோட்டப்பட்டி அருகே விபத்தில் நகை பட்டறை தொழிலாளி இறந்தார்.
அரூர்:
சேலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 49). நகை பட்டறை தொழிலாளி. இவர் தனது நண்பரான செந்திலுடன் மோட்டார் சைக்கிளில் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வனப்பகுதி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையை கடந்த வன விலங்கு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு வெங்கடேஷ், செந்தில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் காயமடைந்த செந்திலை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story