பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவு


பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2022 4:42 PM IST (Updated: 22 March 2022 4:42 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட மனுக்களாக 192 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச்சான்று மற்றும் கோரிக்கை மனுவுடன் வந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில் குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story