31-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

தானேயில் 31-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தானே,
தானேயில் 31-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கீழே குதித்தார்
தானே மாஜிவாடா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 31 மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்த பெண் பிரியா நாக்வேகர்(வயது41). இவர் சம்பவத்தன்று அதிகாலை திடீரென தன் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இதில், அவர் கீழே உள்ள நீச்சல் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ராபோடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
மேலும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வீட்டில் சென்று போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது, பால்கனியில் இயற்கை உபாதை கழித்த நிலையில் கிடந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் சமீபகாலமாக அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story