புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 March 2022 2:46 AM IST (Updated: 23 March 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

தடுப்பு வேலி அமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பிரசித்தி பெற்ற பரித்தியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் உப்பாங்கரை கிராமத்தில் சாலையை ஒட்டி மிகவும் குறுகலான அளவில் பாசன வாய்க்கால் செல்வதால் சில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்து காயமடைகின்றனர். ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி வாய்க்கால் ஓரத்தில் தடுப்பு வேலி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-இனியதமிழன், ஒரத்தநாடு.

கழிவறை பயன்பாட்டுக்கு வருமா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில் நகராட்சி கழிப்பிடம் உள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது இந்த கழிவறை செயல்படாமல் உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பட்டுக்கோட்டை,பொதுமக்கள்.

Next Story