வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் ஏரிக்கரை மற்றும் நீர்நிலை பகுதி அருகிலும் 400-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கோர்ட்டு உத்தரவின்பேரில், மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, சீனிவாசன் ஆகியோர், நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
அதில் 15 நாட்களுக்குள் நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.
இதனை கண்டித்து நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டோர் கோட்டை மைதானத்தில் இருந்து வீட்டை பாடைகட்டி, மாலை அணிவித்து ஊர்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தூக்கி வந்தனர்.
அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story