30 அடி திமிங்கலம் உடல் கரை ஒதுங்கியது

மும்பை கடற்கரையில் உயிரிழந்த 30 அடி திமிங்கலம் கரை ஒதுங்கியது.
மும்பை, மார்ச்.24-
மும்பை வார்டன் ரோடு பிரீச்கேண்டி ஆஸ்பத்திரி அருகே கடற்கரை சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கடற்கரை ஓரமாக திமிங்கலம் உடல் கரை ஒதுங்கி கிடப்பதாக மத்திய மும்பை வனத்துறை அதிகாரி சுரேஷ்வாக்விற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் தங்கள் குழுவுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அது சுமார் 30 அடி நீளமுள்ள திமிங்கலம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திமிங்கலத்தின் உடல் மாதிரிகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளம் தோண்டி ராட்சத கிரேன் மூலம் திமிங்கலம் புதைக்கப்பட்டது.
மராட்டியத்தில் பல ஆண்டுகளான பல்வேறு கடற்கரையில் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பது அதிகரித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
.
Related Tags :
Next Story