தென்னையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறி
தென்னையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறி
ுடிமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.
ரசாயன மருந்துகள்
குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்களால் மகசூல் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறியை கட்டியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது:
தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களை பொருத்தவரை மஞ்சள் நிறம் தாய் பூச்சிகளை கவரக்கூடியதாக உள்ளது. .அதன் அடிப்படையில் தென்னை மரங்களில் 6 அடி உயரத்தில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டி வைத்தோம். இதன் மூலம் சுருள் வெள்ளை ஈக்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இரட்டை ஆதாயம்
அதே நேரத்தில் அவ்வாறு மஞ்சள் நிற ஒட்டும் பொறியை கட்டி வைத்த தென்னை மரங்களில் எலிகள் மற்றும் அணில்களால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. .இதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் அணில்களால் ஏற்படும் இரண்டு விதமான இழப்பை தவிர்த்து இரட்டை ஆதாயம் பெற முடிகிறது. ரசாயன மருந்துகளை கூடுதலாக தெளித்தால் பயிர்களுக்கு பாதிப்பு போல இந்த இயற்கை முறையில் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது என்று கூறினார்.
இது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது :
உயரம் குறைவான மரங்களாக இருந்தால் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிப்பது மூலம் ஈக்கள், முட்டைகள், குஞ்சுகள் போன்றவை அழிக்க முடியும். மேலும் வெள்ளை ஈக்களின் இயற்கை எதிரிகளான என்கார்சியா ஏக்கருக்கு 100 என்ற அளவில் விடலாம். அத்துடன் தோட்டத்தில் வெள்ளை ஈக்கள் காணப்பட்டால் இயற்கையாக அவற்றின் எதிரியான கண்ணாடி இறக்கை பூச்சிகள் உருவாகி விடும் எனவே தென்னந்தோப்புகளில் விவசாயிகள் கண்டிப்பாக களைக் கொல்லிகளை பயன்படுத்த கூடாது. இது கண்ணாடி இறக்கைப்பூச்சிகளை மட்டுமல்லாமல் பெரும்பாலான நன்மை தரும் பூச்சிகளை அழித்து விடும். மேலும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் கண்ணாடி இறக்கை பூச்சிகள் பெருகுவதற்கான சூழலை உருவாக்கலாம்.எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story