சின்னசேலம் கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது


சின்னசேலம் கச்சிராயப்பாளையம் பகுதியில்  சாராயம் விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 9:40 PM IST (Updated: 23 March 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது

சின்னசேலம்

சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டனந்தல், திம்மாபுரம், கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டனந்தல் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த தாவடிபட்டு கிராமத்தை சேர்ந்த தர்மன் மனைவி பரிமளா(வயது48), திம்மாபுரத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற அதே பகுதி நடுதெருவைச் சேர்ந்த பெரியண்ணன் மனைவி ராமாயி(54), எலவாடி ஏரிக்கரையில் சாராயம் விற்ற கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகன் சக்கரவர்த்தி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

 அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாட் மனோ மற்றும் போலீசார் தெங்கியாநத்தம் கிராமத்தில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பெரியண்ணன் மகன் முனியன்(46) நாராயணன் மகன் பெரியசாமி(40), வடக்கநந்தல் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் முருகன்(38) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 45 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story