முதியவரின் கடிதத்தின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை

பதிவுத்துறை அலுவலக உதவியாளர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முதியவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
மதுரை
பதிவுத்துறை அலுவலக உதவியாளர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முதியவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
முதியவர் எழுதிய கடிதம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் சந்திரசேகரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முறையாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்துக்கு மதுரையைச் சேர்ந்த பாக்கியம் சிக்கந்தர் என்ற 70 வயது முதியவர் எழுதிய கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில், குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சந்திரசேகரன், தன் மனைவி, தன்னுடைய மனைவியின் தாய்மாமன், மருமகளின் தந்தை, மூத்த மகன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பெயர்களில் வாங்கி குவித்து உள்ளார்.
தாமாக முன்வந்து விசாரணை
இதுகுறித்த விவரங்களை பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் வசிக்கும் எனது நண்பர்கள் மூலமாக அறிந்து அதிர்ச்சி அடைந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன். அதை தங்களது பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதில் சாட்சிகளாக 25-க்கும் அதிகமானவர்களை சேர்த்திருந்தார்.
இந்த கடிதத்தை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்து, கடிதத்தின் அடிப்படையிலான மனுவை விசாரணை பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த மனு நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து பதிவுத்துறை செயலாளர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story