கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 7 ஆயிரம் நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 7 ஆயிரம் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 24 March 2022 11:07 PM IST (Updated: 24 March 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு:
வாய்மேடு அருகே கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல்மூட்டைகள் தேக்கம்
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.. தற்போது வரை இந்த கொள்முதல் நிலையத்தில் சுமார் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
 இந்த கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மழை
கொள்முதல் நிலையத்தில் இருந்து கடந்த ஒரு வாரமாக நெல் ஏற்ற லாரி வரவில்லை. இதனால் இங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நாள்தோறும் வந்து காத்துகிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவம் தவறி பெய்யும் மழையால் எந்த நேரத்தில் மழைவரும் என கணிக்க முடியவில்லை. 
திடீரென மழை பெய்தால் திறந்தவெளியில் இருக்கும் நெல்மூட்டைகள் நனைந்துவிடும் நிலை உள்ளது. எனவே விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க விரைவில் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story