போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம்


போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம்
x
தினத்தந்தி 25 March 2022 12:25 AM IST (Updated: 25 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

வாணியம்பாடி

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் கண்பார்வை இழப்பு, நிரந்தர உடல் ஊனம், குடும்ப பாசம் மற்றும் சமூகத்தில் மதிப்பு குறையும், மற்றும் மரணம் ஏற்படுவது குறித்தும், சாராயம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு நாடகம் நடைப்பெற்றது. 

இதில் சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கலால் பிரிவு,  வாணியம்பாடி வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story