மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 25 March 2022 2:06 AM IST (Updated: 25 March 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மதுரை
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா” கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படக்கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அதன் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மினி மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை கலெக்டர் அனிஷ் சேகர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. இந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story