காட்பாடி மகிமண்டலம் பகுதியில் 30-ந்தேதி மனுநீதி நாள் முகாம்
காட்பாடி மகிமண்டலம் பகுதியில் வருகிற 30-ந்தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் காட்பாடி தாலுகா மகிமண்டலம் கிராமத்தில் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்களிடம் இருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும்.
மனுதாரர்கள் தங்களது மனுவில் செல்போன் எண், ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story