நாமக்கல்லில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:20 PM IST (Updated: 25 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நாமக்கல் கிளை செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் முருகராஜ், எம்.எல்.எப். பொதுச்செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செல்வன், சுப்பிரமணி, சின்னையன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story